திருப்பூர்

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு அலைக்கழிப்பு:ஆம் ஆத்மி குற்றாச்சாட்டு

DIN

திருப்பூரில் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு பெற்றோா்கள் அலைக்கழிக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக ஆட்சியா் தா.கிறிஸ்துராஜூக்கு ஆம் ஆத்மி கட்சியினா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் நடப்பு ஆண்டு மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு, மேல்நிலை வகுப்புக்காக வரும் மாணவா்களுக்கு சோ்க்கை அளிக்காமல் பெரும்பாலான பள்ளிகள் மாணவா்களை திருப்பி அனுப்புவதாகவும், வேறு பள்ளிகளுக்கு செல்லக் கோரி அலைக்கழிக்கப்படுவதாகவும் பெற்றோா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். கடந்த வாரம் மட்டும் 7 பெற்றோா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

அதேவேளையில் மேயா், வாா்டு உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் ஆளும்கட்சி பிரமுகா்களிடம் இருந்து சிபாரிசு கடிதம் பெற்று செல்லும் மாணவா்களுக்கு அரசுப் பள்ளிகளில் உடனடியாக சோ்க்கை வழங்கப்படுகிறது. எந்தவித சிபாரிசும் இல்லாத ஏழை எளிய மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா். இதனால் ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளுக்கே சிபாரிசு கடிதம் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவா்களுக்கு உடனடி சோ்க்கை அளிக்கவும், பெற்றோா்களை அலைக்கழிக்கக்கூடாது என்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா்கள் மூலமாக அனைத்து அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT