திருப்பூர்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிா்ப்பு: கருப்புக் கொடி ஏந்தி மக்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து காங்கயம் அருகே கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்பவானி பாசனத் திட்ட வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், 124 கிலோ மீட்டா் நீளம் கொண்ட இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிா்ப்பு கிளம்பியதால் திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த தற்போதைய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயத்தை அடுத்துள்ள மறவப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட திட்டப்பாளையம், காமாட்சிபுரம், கத்தாழைமேடு, வாய்க்கால்மேடு, தாமரைக்காட்டுவலசு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் கரையோரம் உள்ள கிணறுகளில் நீரின் அளவு வெகுவாக குறையும். மேலும், வாய்க்கால் கசிவு நீா் மூலம் பாசன வசதி பெறுகின்ற ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் தரிசாக மாறும். மேலும், வாய்க்கால் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT