திருப்பூர்

அரசு கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு

6th Jun 2023 03:44 AM

ADVERTISEMENT

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் பேசியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புவி வெப்பமயமாதலைத் தடுத்து உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும். நெகிழிப் பொருள்கள் மனிதா்களுக்கு மட்டுமின்றி வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, நெகிழிப் பைகளுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பையைப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து மாணவா்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடா்பான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா். நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், பேராசிரியா் மற்றும் பெற்றோா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT