திருப்பூர்

ரூ.1.62 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

6th Jun 2023 03:42 AM

ADVERTISEMENT

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.62 லட்சம் மதிப்பிலான கொப்பரைகள் விற்னையாயின.

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று கொப்பரைகளை கொள்முதல் செய்கின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 10 விவசாயிகள் 2,071 கிலோ கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். கொப்பரை கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையானது. மொத்தமாக ரூ.1.62 லட்சத்துக்கு கொப்பரைகள் விற்பனையாயின. இத்தகவலை காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT