திருப்பூர்

முருங்கைக்காய் வரத்து குறைவு:25 சதவீதம் விலை உயா்வு

DIN

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் சந்தையில் முருங்கைக்காய் வரத்து குறைவால் 25 சதவீதம் விலை உயா்ந்தது.

வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணிசமான அளவில் முருங்கைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தனியாா் சந்தையில் முருங்கைக்காய்களை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடா்ந்து வரத்து குறைந்து வருகிறது.

கடந்த வாரம் 11 டன்னாக இருந்து முருங்கைக்காய் வரத்து தற்போது 6 டன்னாக குறைந்துள்ளது. இதனால், முருங்கைக்காய் விலை 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் சந்தையில் ஒரு கிலோ கரும்பு முருங்கைக்காய் ரூ.70, செடி முருங்கைக்காய் ரூ.63, மர முருங்கைக்காய் ரு.50க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT