திருப்பூர்

சூறாவளி காற்றுடன் மழை:வாழை மரங்கள் சேதம்

5th Jun 2023 02:43 AM

ADVERTISEMENT

 

சேவூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தது.

சேவூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது. பொங்கலூா் புதி காலனி பகுதியில் மின்கம்பம் சாய்ந்தது. மேலும், பொங்கலூா் அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஓடுகள் உடைந்து பள்ளிக் கட்டடம் சேதமடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT