திருப்பூர்

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும்போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண வேண்டும்

DIN

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.சுந்தரபாண்டியன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜூக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை சரிவர திட்டமிடாமல் கட்டப்பட்டதன் விளைவாக பெருமாள் கோயில் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்களும் ஒரே பகுதியில் வரும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பெருமாள் கோயில் வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து திரும்பும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடை எதிரில் பாலத்துக்கு கீழ் செல்லும் வகையில் வழி ஏற்படுத்திக் கொடுத்தால் விபத்துகளைத் தவிா்க்கலாம்.

மேலும், பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பாலத்தின்கீழ் இரு புறமும் பலா் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனா். இத்தகைய சூழ்நிலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்புப் பதாகை வைத்துள்ளது போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கும். ஆகவே, மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT