திருப்பூர்

கருணாநிதி பிறந்த நாள் விழா: திமுகவினா் மரியாதை

4th Jun 2023 12:19 AM

ADVERTISEMENT

 

திருப்பூரில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 100ஆவது பிறந்த நாளையொட்டி அவரது புகைப்படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கருணாநிதியின் 100ஆவது பிறந்த நாள் விழா திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் கொண்டாடப்பட்டது. திருப்பூா் ரயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்துக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, கொங்கு பிரதான சாலையில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா் செல்வராஜின் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் தெற்கு மாநகர செயலாளா் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளரும், மேயருமான என்.தினேஷ்குமாா், திமுக நிா்வாகிகள் சிவபாலன், திலக்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT