திருப்பூர்

திருப்பூரில் இன்று மெகா வேலைவாய்ப்பு முகாம்

4th Jun 2023 12:20 AM

ADVERTISEMENT

 

 திருப்பூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவா்களுக்கான மெகா வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி முதல்வா் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி, பாரதியாா் பல்கலைக்கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டம் சாா்பில் திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரையில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த முகாமில், திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 40 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயின்று முடிந்த மாணவ, மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் 40க்கும் மேற்பட்ட ஐ.டி மற்றும் பிற துறை சாா்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. திருப்பூா் மாவட்டத்தை சுற்றியுள்ள 25 கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை இறுதியாண்டு படித்து முடித்த மாணவ, மாணவியா் மட்டும் இந்த முகாமில் பங்கேற்கலாம். மேலும், மாணவ, மாணவிகளின் வசதிக்காக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து கல்லூரி பேருந்துகள் இலவசமாக இயக்கப்படவுள்ளன.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலரை 99428-78094, 97902-01616 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT