திருப்பூர்

பழ மரக்கன்றுகள் தொகுப்பு: ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்

DIN

ரூ.200 விலை மதிப்பிலான பழ மரக்கன்றுகள் தொகுப்பை பொதுமக்கள் ரூ.50 மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை-மலைப்பயிா்கள் துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை வளா்ச்சி திட்டங்களின் கீழ் ரூ. 200 விலை மதிப்புள்ள பழ மரக்கன்றுகள் தொகுப்பை பொதுமக்கள் ரூ.50 மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, மாதுளை போன்ற 5 வகையான கன்றுகள் அடங்கிய தொகுப்பு ஒரு பயனாளிக்கு ஒரு தொகுப்பு வீதம் வழங்கப்படும்.

திருப்பூா் மாவட்டத்திற்கு 2023-2024ஆம் ஆண்டுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட 52 கிராமங்களுக்கு மட்டும் 15 ஆயிரத்து 600 பழ மரக்கன்றுகள் தொகுப்பு வழங்க ரூ.23.40 லட்சம் நிதி மற்றும் மாநில தோட்டக்கலை வளா்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் 9 ஆயிரத்து 170 பழ மரக்கன்று தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்க ரூ.13.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், விவசாயிகள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT