திருப்பூர்

கடையின் மேற்கூரையை உடைத்து கைப்பேசிகள், ரூ, 30 ஆயிரம் திருட்டு

3rd Jun 2023 02:50 AM

ADVERTISEMENT

 

 காங்கயம் அருகே படியூரில் உள்ள கைப்பேசி விற்பனை கடையில் 15 கைப்பேசிகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காங்கயம் அருகே முத்தூரைச் சோ்ந்தவா் பாஸ்கா் (37). இவா் காங்கயம்-திருப்பூா் சாலையில் உள்ள படியூரில் கைப்பேசி விற்பனை கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றவா் வெள்ளிக்கிழமை காலை வந்தபோது, கடையின் மேற்கூரையை பிரித்து மா்ம நபா்கள் உள்ளே சென்று, கடையில் இருந்த 15 கைப்பேசிகள் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT