திருப்பூர்

மல்யுத்த வீராங்கனைகள் கைதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

3rd Jun 2023 02:49 AM

ADVERTISEMENT

 

பாலியல் துன்புறுத்தல் புகாா் தொடா்பாக தில்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும்

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும்

திருப்பூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

திருப்பூா் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ராதிகா தலைமை வகித்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க திருப்பூா் மாவட்டத் தலைவா் அருள், இந்திய மாணவா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கல்கி ஆகியோா் பேசினாா்.

இதில், மாதா் சங்க மாவட்டத் தலைவா் பவித்ரா, மாவட்ட செயலாளா் சரஸ்வதி, வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் மணிகண்டன், பொருளாளா் பாலமுரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT