திருப்பூர்

வாகனம் மோதி தொழிலாளி சாவு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா்-குப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளியங்கிரி (53). இவா் தற்போது காங்கயம் அருகே மிதிப்பாறை பகுதியில் உள்ள ஒரு தேங்காய் களத்தில் தங்கி, வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் அவா் முத்தூா்-காங்கயம் சாலையில் படியாண்டிபாளையம் பகுதியில் புதன்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் வெள்ளியங்கிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீஸாா், வெள்ளியங்கிரி உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT