திருப்பூர்

ரூ. 24.15 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 24.15 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, இடையகோட்டை, வளையபட்டி, பாலகாட்டூா், களத்துப்பட்டி, பஞ்சப்பட்டி, எலப்பட்டி உள்ளிட்ட ஊா்களில் இருந்து 78 விவசாயிகள் 56 ஆயிரத்து 695 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். காரமடை, சித்தோடு, பூனாட்சி, காங்கயம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா்.

சூரியகாந்தி விதை கிலோ ரூ.38.91 முதல் ரூ. 46.17 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 44.16. கடந்த வார சராசரி விலை ரூ. 44.44. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 24.15 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT