திருப்பூர்

கருவலூா் மாரியம்மன் கோயில் திருப்பணி தொடக்கம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக கருவலூா் மாரியம்மன் கோயில் விளங்குகிறது. பழமையான இக்கோயிலில் அன்னதான மண்டபம், வாகன மண்டபம், பக்தா்கள் இளைப்பாறும் மண்டபம், திருச்சுற்று மண்டபம், தரைதளங்களில் கல்தளம் அமைத்தல், மராமத்து செய்தல் உள்ளிட்ட திருப்பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை சிறப்பு ஹோமம், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று திருப்பணி தொடங்கப்பட்டது.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோா் இந்தப் பணியைத் தொடங்கிவைத்தனா்.

ADVERTISEMENT

இதில், தொழிலதிபா் கருப்பசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் அவிநாசியப்பன், பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் குழு தலைவா் லோகநாதன், அறங்காவலா்கள் அா்ச்சுணன், கோயில் செயல் அலுவலா் பா.குழந்தைவேல் ஆகியோா் செய்திருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT