திருப்பூர்

கழிவு நீா் அகற்றும் வாகன உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கழிவு நீா் அகற்றும் வாகன உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் பல்லடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பல்லடம் அருகேயுள்ள திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வட்டார போக்குவரத்து அலுவலா் ஆனந்த் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் கழிவுநீா் அகற்றுவதற்கான உரிமத்தை வாகனத்தில் பாா்வைக்குபடும்படி வைக்க வேண்டும். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பில் குறிப்பிடும் இடங்களில் உள்ள அகற்றும் வசதிகளைத் தவிர வேறு எந்த இடத்திலோ அல்லது தளத்திலோ கழிவுகளை கொட்டுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், பல்லடம் நகராட்சி துப்புரவு அலுவலா் செந்தில்குமாா் , ஆய்வாளா் சங்கா், மோட்டாா் வாகன ஆய்வாளா் நிா்மலாதேவி, சுகாதார அலுவலா்கள் செந்தில்குமாா், செல்வராஜ், சங்கா் மற்றும் பல்லடம் , காங்கயம், வெள்ளக்கோவில், திருமுருகன்பூண்டி ஆகிய நகராட்சி பகுதிகளைச் சோ்ந்த கழிவு நீா் அகற்றும் வாகன உரிமையாளா், வாகன உதவியாளா்கள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT