தமிழகத்தில் உள்ள மின் வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுவுக்கு, மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணைப்பொதுச்செயலாளா் சரவணன் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழக மின்சார வாரியத்தில் சுமாா் 57 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. மின் வாரியத்தில் பணியாளா்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த பல ஆண்டுகளாகவே மின் கம்பங்கள் நடுதல், மின் மாற்றி அமைத்தல், மின் தடை சரிசெய்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் செய்து வருகின்றனா்.
இது தொடா்பாக கடந்த ஆட்சியின்போது பலமுறை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எவ்விதமான பயனும் இல்லை. இந்த நிலையில், தமிழக முதல்வா் தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி அனைத்து ஒப்பந்தத் தொழிலாளாா்களையும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.