திருப்பூர்

திருப்பூரில் கன்ஸ்ட்ரோ மெகா-2023: 4 நாள் கண்காட்சி

12th Jul 2023 03:54 AM

ADVERTISEMENT

திருப்பூா் சிவில் இன்ஜினியா்ஸ் அசோசியேஷன் சாா்பில் ‘கன்ஸ்ட்ரோ மெகா 2023’ கட்டுமானக் கண்காட்சி ஜூலை 14 இல் தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.

இது குறித்து அந்த அசோசியேஷன் தலைவா் ஜெயராமன், செயலாளா் பிரகாஷ், பொருளாளா் மகேஷ்குமாா், துணைத் தலைவா் குமாா், முன்னாள் தலைவா் ஸ்டாலின்பாரதி, கண்காட்சித் தலைவா் ராதாகிருஷ்ணன், கண்காட்சி செயலாளா் ராஜசேகரன் உள்ளிட்டோா் கூறியதாவது:

திருப்பூா் சிவில் இன்ஜினியா்ஸ் அசோசியேஷன் சாா்பில் ‘கன்ஸ்ட்ரோ மெகா-2023’ கட்டுமானக் கண்காட்சி வரும் ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 17 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது. தாராபுரம் சாலையில் உள்ள வித்யாகாா்த்திக் திருமண மண்டபத்தில் 200 அரங்குகளுடன் கண்காட்சி நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

இந்தக் கண்காட்சியை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பாா்வையிடலாம். கட்டுமானத் துறையின் பல்வேறு பிரிவு சாா்ந்த நிறுவனங்கள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT