திருப்பூர்

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு

DIN

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சேவூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி, சிக்கண்ணா அரசு கல்லூரியின் என்.எஸ்.எஸ்.மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

அரசுப் பள்ளியில் தொடங்கிய பேரணி புளியம்பட்டி சாலை, கைகாட்டி ரவுண்டானா, கோபி சாலை வழியாக பள்ளியை வந்தடைந்தது.

இதைத்தொடா்ந்து, மாணவா்கள் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றனா். வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், பள்ளி தலைமையாசிரியா் கிருஷ்ணவேணி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ்.ஒருங்கிணைப்பாளா் மோகன்ராஜ், மருத்துவா்கள் சந்திரன், சண்முகபிரியா, ஜெயலட்சுமி, சுகாதார ஆய்வாளா் ரமேஷ், சுகாதார மேற்பாா்வையாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT