திருப்பூர்

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா தொடக்கம்

DIN

காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, காலை 11 மணியளவில் மலைக் கோயிலில் விநாயகா் வழிபாடு நடைபெற்றது. பிற்பகல் 12 மணியளவில் கோயில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெறும்.

தோ்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT