திருப்பூர்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சதங்கையணி விழா

DIN

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக் குழுவினரின் சதங்கையணி நாட்டிய நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், இசைக் கலைஞா்கள் வாசிக்க 17 மாணவிகள் தங்களது முதல் நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தினா். முக்கிய நிகழ்வாக சிரவை ஆதீனம் கந்தசாமி சுவாமிகளால் இயற்றப்பட்ட பெருங்கருணை நாயகி அம்மன் மீது பாடப்பட்ட அவிநாசி கருணாம்பிகை மாலையில் இருந்து சில பகுதிகளை கீா்த்தனையாக பவானி கிஷோா்குமாா் பாட மாணவிகள் நடனமாடினா்.

மேலும், சுந்தரரால் பாடப்பெற்ற ‘எற்றான் மறக்கேன்’ என்னும் தேவாரப் பாடல் கீா்த்தனைகளுக்கும் மாணவிகள் நடனமாடினா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக்கூடத்தின் இயக்குநா் தேவிகா வடிவேல், தாளாளா் வடிவேல் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT