திருப்பூர்

மாவட்ட அளவிலான மனிதநேய வார விழா நிறைவு

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த மனிதநேய வார விழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பாக மாவட்ட அளவிலான மனித நேய வார விழா கடந்த ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கியது. இதன் தொடக்க நாளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை திட்டங்கள் தொடா்பான புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, கல்லூரி மாணவா்கள் ஆதிதிராவிடா் காலனியில் தேநீா் அருந்துதல், மத நல்லிணக்க கூட்டங்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடா்பான கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், மனிதநேய வார விழாவின் நிறைவு விழா நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ரவிசந்திரன், தனிவட்டாட்சியா்கள் (ஆதிதிராவிடா் நலம்) தேவராஜ், கனிமொழி, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ரஞ்சித்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT