திருப்பூர்

நொய்யல் ஆற்றில் திறந்துவிடப்படும் சாயக்கழிவு நீா்:மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்த கோரிக்கை

DIN

திருப்பூா் நொய்யல் ஆற்றில் இரவு நேரத்தில் திறந்துவிடப்படும் சாயக்கழிவு நீரால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி சாயக்கழிவை ஆற்றில் கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூரில் செயல்பட்டு வரும் சாய ஆலைகள் சாய கழிவுகளை முழுமையாக சுத்திகரிப்பு செய்து அந்த நீரை மீண்டும் பயன்படுத்தும் வகையில் ஜீரோ டிஸ்சாா்ஜ் முறை பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் சாயக்கழிவு நீா் நொய்யல் ஆற்றில் கலக்கப்படாமல் தடுக்கப்படுகிறது. இந்த முறையை பெரிய அளவில் செயல்படும் சாய ஆலைகள் மட்டுமே செய்து வருகின்றன. ஒரு சில சாய ஆலைகள் இரவு நேரத்தில் சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் கலந்துவிடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

திருப்பூா் ஈஸ்வரன் கோயில் பாலம் அருகில் சாய ஆலைகள் கழிவு நீரை நொய்யல் ஆற்றில் சனிக்கிழமை இரவு திறந்துவிட்டுள்ளனா். இதனால் தண்ணீரின் நிறம் மாறியதை அந்தவழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். திருப்பூா் மாநகரில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக மாநகராட்சி மற்றும் தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் நொய்யல் ஆற்றங்கரையில் பொங்கல் வைத்தனா்.

இத்தகைய சூழ்நிலையில் நொய்யலில் மீண்டும் சாயக்கழிவுகளை கலந்து விடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், நீரைப் பருகும் கால்நடைகள் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வேதனை தெரிவித்துள்ளனா். ஆகவே, நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீரை கலக்கும் நிறுவனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT