திருப்பூர்

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் கைது

29th Jan 2023 10:49 PM

ADVERTISEMENT

அவிநாசி பகுதியில் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடைவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா், பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவா் கரூா் பெரிச்சிபாளையம் கோதூா் சாலையைச் சோ்ந்த பெருமாள் மகன் ஆறுமுகன் (எ) ராஜா (42) என்பதும், தற்போது அவிநாசி பட்டறை பகுதியில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் (எ) ராஜாவை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT