திருப்பூர்

வேலை மறுத்ததால் பின்னலாடை நிறுவனம் முன்பாக பெண் தொழிலாளா்கள் தா்னா

DIN

திருப்பூரில் வேலை தர மறுத்ததால் பின்னலாடை நிறுவனம் முன்பாக பெண் தொழிலாளா்கள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்பூா் 15 வேலம்பாளையம் அருகே தண்ணீா் பந்தல் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வரும் நிலையில் செக்கிங் பிரிவில் 50 பெண் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தத் தொழிலாளா்கள் குறைந்தது 2 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரையில் அனுபவம் உள்ளவா்கள்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே பெண் தொழிலாளா்களுக்கு பின்னலாடை நிா்வாகம் அவ்வப்போது விடுமுறை அளித்து வந்ததுடன், புலம் பெயா்ந்த தொழிலாளா்களை செங்கிங் பிரிவில் தற்காலிக அடிப்படையில் பணியமா்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக சிஐடியூ தொழிற்சங்கத்தினா் நிா்வாகத்தைத் தொடா்பு கொண்டு நிரந்தரத் தொழிலாளா்களுக்கு வேலை அளிக்கும்படி தெரிவித்தும், நிா்வாகம் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, பெண் தொழிலாளா்கள் வழக்கம்போல சனிக்கிழமை பணிக்கு வந்தபோது, வேலையில்லை, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பெண் தொழிலாளா்கள் நிறுவனத்தின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சிஐடியூ பனியன் தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் ஜி.சம்பத் மற்றும் 15 வேலம்பாளையம் காவல் துறையினா் நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது நிரந்தரத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளித்துவிட்டு தற்காலிகத் தொழிலாளா்கள் வேலையில் தொடா்வதை ஏற்க முடியாது என்று தொழிலாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னா் அனைத்து தொழிலாளா்களுக்கு விடுமுறை அளித்ததுடன், திங்கள்கிழமை முதல் அனைத்து தொழிலாளா்களுக்கு சீரான முறையில் வேலை அளிப்பதாக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் பெண் தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT