திருப்பூர்

முத்தூரில் ரூ. 2 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் ரூ. 2 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 7,897 தேங்காய்கள் வரத்து இருந்தது. இதன் எடை 3,208 கிலோ. கிலோ ரூ. 22.05 முதல் ரூ. 26.75 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 25.50

64 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. இதன் எடை 1,657 கிலோ. கிலோ ரூ. 58.65 முதல் ரூ. 82.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 78.15.

மொத்தம் 80 விவசாயிகள், 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.03 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

சுட்டெரிக்கும் வெயில்: தூய்மைப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்

இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம்

கடையநல்லூரில் ஆய்வக உதவியாளா்களுக்கு பயிற்சி

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் இரட்டை சிறை தண்டனை

SCROLL FOR NEXT