திருப்பூர்

பள்ளி மாணவிக்கு நகராட்சி ஆணையா் நிதியுதவி

DIN

பள்ளி மாணவி கல்வியைத் தொடரும் வகையில் அவருக்கு காங்கயம் நகராட்சி ஆணையா் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

காங்கயம், காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருபவா் சி.அருள்ஜோதி. குடும்பத்தைவிட்டு தந்தை பிரிந்து சென்ற நிலையில் உடல் நலிவுற்ற தாயுடன் வசித்து வருகிறாா். வறுமை காரணமாக இவரால் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், மாணவி தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சாந்தி அமலோா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT