திருப்பூர்

குண்டடம் அருகே வட்டார அளவிலான மருத்துவ முகாம்

DIN

திருப்பூரை அடுத்த குண்டடம் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடக்கிவைத்தாா்.

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட செங்கோடம்பாளையம் ஊராட்சியில் பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான இலவச சிறப்பு மருத்துவ முகாமை செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வா் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். தமிழக முதல்வா் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே கரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலமாக வட்டார அளவில் நடைபெறும் ஒவ்வொரு மருத்துவ முகாமிலும் மருத்துவா், மகப்பேறு மருத்துவா், குழந்தைகள் நல மருத்துவா் உள்ளிட்ட 15 போ் கொண்ட மருத்துவக் குழுக்கள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதைத்தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ் பள்ளி மாணவியா்களுக்கு கண் கண்ணாடிகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் நாகராஜ், செங்கோடம்பாளயம் ஊராட்சி மன்றத் தலைவா் சரஸ்வதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT