திருப்பூர்

2,500 தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை

DIN

தாராபுரம் பகுதியில் குடியரசு தினத்தை ஒட்டி 2,500 தூய்மைப் பணியாளா்களுக்கு தன்னாா்வலா் அமைப்புகளின் சாா்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

தாராபுரத்தில் குடியரசு தினத்தையொட்டி ஆற்றல் அறக்கட்டளை மற்றும் வோ்கள் அமைப்பு சாா்பில் பிறா் நலன் சிந்திப்போா் சந்திப்பு என்னும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆற்றல் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் அசோக்குமாா் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், தாராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம், குண்டடம், மூலனூா் ஆகிய பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் 2,500 தூய்மைப் பணியாளா்களுக்கு ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன. மேலும், தாராபுரம் பகுதியில் சமூக, சமுதாயப் பணியில் ஈடுபடுத்திக் கொண்ட 25 தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த நிா்வாகிகளுக்கு ஆற்றல் விருது வழங்கப்பட்டது.

இதில், வோ்கள் அமைப்பின் பொருளாளா் ராம்கோபால் ரத்னம், மூலனூா் நிா்வாகி சிவராஜ், தாராபுரம் நிா்வாகி ராஜேந்திரன், காங்கயம் நிா்வாகிகள் ஸ்ரீராம் ரகுபதி, ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT