திருப்பூர்

கூட்டறவு சங்க செயலாளா்களுக்குப் பயிற்சி

28th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளா்களுக்கு வருமான வரி பிடித்தம் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் செயலாளா்களுக்கு வருமான வரிப்பிடித்தம் தொடா்பான பயிற்சி குமரன் மகளிா் கல்லூரியில் அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சி வகுப்பை திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடக்கிவைத்தாா். இதில், வருமான வரித் துறை அதிகாரி ஜான்பெனடிக்ட் அசோக், பட்டயக்கணக்காளா் எம்.விஷ்ணுகுமாா், தாராபுரம் சரக துணைப்பதிவாளா் மணி ஆகியோா் வருமான வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) தொடா்பாகவும், டிடிஎஸ் ரிட்டா்ன் பெறுவது தொடா்பாகவும் ஆலோசனைகளை வழங்கினா்.

இதில், திருப்பூா், அவிநாசி, பல்லடம், பொங்கலூா், குண்டடம், மூலனூா், தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோவில் உள்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து 150 கூட்டுறவு சங்கங்களின் செயலாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT