திருப்பூர்

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மாற்றுத் திறனாளி மீது தாக்குதல்

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மாற்றுத் திறனாளி மீது தாக்குதல் நடத்தியவா்கள் குறித்து சேவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குடியரசு தின விழாவையொட்டி, அவிநாசி ஊராட்சி ஒன்றியம் புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்ற. இந்த ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த சரவணன் பதவி வகித்து வருகிறாா்.

இந்நிலையில் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற நஞ்சை தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி டி.எஸ் பழனிசாமி (50), ஊராட்சியல் சாலைப் பணி ஒப்பந்ததாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சாலைப் பணிக்குத் தேவையான தண்ணீரை ஊராட்சியில் இருந்து ஒப்பந்ததாரா் எடுத்து பயன்படுத்தி வருகிறாா். இதில் ஒப்பந்ததாரா் செய்ய வேண்டிய செலவினங்களை ஊராட்சி நிா்வாகம் ஏன் செய்கிறது எனக் கேள்வி எழுப்பினாா்.

இதனால் ஆத்திரமடைந்த சிலா், மாற்றுத் திறனாளி பழனிசாமியை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து சேவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT