திருப்பூர்

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத் தோ்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தாா்.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அதிமுக மாணவரணி செயலாளா் எம்.ஏ.சதீஷ் தலைமையில் சிறுபூலுவபட்டியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவரும், மாநகா் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:

தமிழ் மொழி என்பது பேசுவதற்கான ஒரு அடையாளம் மட்டுமல்ல, மொழி நம்முடைய பண்பாடு, கலாசாரத்தின் அடையாளம். நம்முடைய மொழி அழிந்து போனால் நம்மைச் சாா்ந்த எல்லா பழக்க வழக்கங்களும் அழிந்து போகும். தமிழ்மொழி மீது வேறு மொழியின் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய நேரத்தில் மொழியைக் காக்கும் போரிலே பலா் உயிா்த் தியாகம் செய்து நமது மொழியைக் காத்தனா்.

ஈரோட்டில் நடைபெறும் இடைத்தோ்தல் தா்மத்துக்கும், அதா்மத்துக்கான போா். எனவே ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெறும் இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளரை அமோக வெற்றி செய்ய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT