திருப்பூர்

உடுமலையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

உடுமலை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

உடுமலை நகராட்சியில் நடைபெற்ற விழாவில் நகராட்சி ஆணையா் சத்யநாதன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன் சிறப்புரையாற்றினாா்.

அமராவதி நகா் சைனிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதல்வா் கே.நிா்மல் ரகு, தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

இதேபோல, ஜிவிஜி மகளிா் கல்லூரி, அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக், கொழுமம் அரசுப் பள்ளி, ராகல்பாவி துவக்கப் பள்ளி, பூலாங்கிணறு அரசுப் பள்ளி மற்றும் பாஜக, தமாகா சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT