திருப்பூர்

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு ஒரு ஆண்டு சிறை

22nd Jan 2023 01:58 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அவிநாசி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

பெருமாநல்லூா் கணக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (33). இவரிடமிருந்து ரூ.1000, கைப்பேசி உள்ளிட்டவற்றை 4 போ் கடந்த 2018 ஆம் ஆண்டு பறித்துச் சென்றுள்ளனா்.

இது குறித்து பெருமாநல்லூா் காவல் நிலையத்தில் ஆனந்தராஜ் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பெருமாநல்லூா் பாண்டியன் நகரைச் சோ்ந்த காதா் மீரான் (24), கோபிநாத் (23), ஆசிக் (23), ராஜா (23) ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு அவிநாசி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி கே.எஸ்.சபீனா தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT