திருப்பூர்

சிக்கண்ணா, எல்.ஆா்.ஜி. கல்லூரிகளில் புதிய வகுப்பறை கட்டங்கள் திறப்பு

21st Jan 2023 12:52 AM

ADVERTISEMENT

திருப்பூா் சிக்கண்ணா, எல்.ஆா்.ஜி.மகளிா் கலைக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஆகியவற்றில் கூடுதல் வகுப்பறைகளை வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் சுமாா் 11 ஆயிரம் சதுர அடியில், 3 தளங்களை கொண்ட 10 வகுப்பறைகளும், எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.3 கோடியே 74 லட்சம் மதிப்பில் சுமாா் 24 ஆயிரம் சதுர அடியில் 5 தளங்களை கொண்ட 18 வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன.

முன்னதாக, திருப்பூா் சிக்கண்ணா மற்றும் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரிகளில் நடைபெற்ற திறப்பு விழாவில் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

இதில், கல்லூரி முதல்வா்கள் வ.கிருஷ்ணன், எழிலி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ராதாகிருஷ்ணன், திமுக நிா்வாகி சு.சிவபாலன், கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT