திருப்பூர்

முத்தூரில் 2.60 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனை

1st Jan 2023 04:14 AM

ADVERTISEMENT

 

 வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.60 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 4,397 தேங்காய்கள் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 1,893 கிலோ. கொப்பரை கிலோ ரூ.18.75 முதல் ரூ.27.25 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.24.65.

36 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 755 கிலோ. கொப்பரை கிலோ ரூ.58.80 முதல் ரூ.86.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.79.15. ஏலத்தில் 67 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா். மொத்தம் 2.60 விளைபொருள்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.05 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT