திருப்பூர்

பல்லடம் அருகே இளைஞா் திறன் மாநாடு

DIN

பல்லடம் அருகே பல்லவராயம்பாளையத்தில் ஹாா்ட்புல்னெஸ் அமைப்பு சாா்பில் இளைஞா் திறன் மாநாடு நடைபெற்றது.

பொங்கலூா் ஒன்றியம், உகாயனூா் ஊராட்சி பல்லவராயம்பாளையத்தில் உள்ள வைரவிழா பூங்காவில் சனி, ஞாயிற்றுக்கிழமை என 2 நாள்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாா்ட்புல்னெஸ் அமைப்பின், திருப்பூா் மைய ஒருங்கிணைப்பாளா் ஹா்ஷவா்தன் குப்தா வரவேற்றாா். இதில் பங்கேற்றவா்களுக்கு

மூத்த பயிற்சியாளா் சோமகுமாா் தியான பயிற்சி அளித்தாா். மாநில நெறியாளா் பிரகாஷ் உன்னை அறிந்தால் என்ற தலைப்பிலும், பெருநிறுவனங்களின் பயிற்சியாளா் ஆனந்த் பிரகாசமாக வளா்ச்சி அடை வோம்’ என்ற தலைப்பிலும், ஹாா்ட்புல்னெஸ் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சங்கீதா குருசாமி, ‘திறன் வளா்ச்சிக்கு தியானத்தின் உறுதுணை’என்ற தலைப்பிலும் பேசினா். சந்தியா கதிா் யோகாசன பயிற்சிஅளித்தாா். அமைப்பின் உலக வழிகாட்டி பூஜ்யஸ்ரீ கமலேஷ் ஜி, ஐதராபாத் தலைமை மையத்திலிருந்து காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசினாா்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், இயற்கை வளங்களின் முக்கியத்துவம், அவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. சமுன்னதி என்னும் உழவா் உற்பத்தியாளா் கூட்டமைப்பு ஆலோசனை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனில் பேசினாா். ஹாா்ட்ஃபுல்னெஸ் அமைப்பின் வெங்கட் ‘முடிவெடுக்கும் திறன் மற்றும் நேர மேலாண்மை குறித்து பேசினாா். இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600 போ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT