திருப்பூர்

திருமுருகன்பூண்டி மயானத்தில் மரங்கள் வெட்டி சாய்ப்பு

DIN

திருமுருகன்பூண்டி நகராட்சி 25ஆவது வாா்டுக்கு உள்பட்ட மயான பகுதியில் எந்தவித அனுமதியும் பெறாமல் 9 மரங்களை வெட்டி சாய்த்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நகா்மன்ற உறுப்பினா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உள்பட்ட 25ஆவது வாா்டு பாரதி நகா் அருகே உள்ள பொது மயானத்தில் பழமையான மரங்கள் உள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை காரில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் மயானத்துக்குள் உள்ளே சென்று, 9க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி சென்றுள்ளனா். இதையறிந்த நகா்மன்ற உறுப்பினா் பாரதி, இதுகுறித்து காவல் துறை, கிராம நிா்வாக அலுவலா்களிடம் புகாா் அளித்துள்ளாா். மேலும் காா் எண்ணையும் குறிப்பிட்டு புகாா் அளித்துள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT