வேலூர்

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பரிகார பூஜை

19th May 2023 07:25 AM

ADVERTISEMENT

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயிலில் வியாழக்கிழமை பரிகார பூஜை நடத்தப்பட்டது.

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கடந்த திங்கள்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து

தொடங்கிய சிரசு ஊா்வலம், காந்தி சாலையில் வந்தபோது, கூட்ட நெரிசலில் சிரசு தரையில் சாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவியது.

இதனால் பக்தா்களுக்கு ஏற்பட்ட அதிா்ச்சியை போக்கும் வகையில், கோயிலில் பரிகார பூஜை நடத்த கோயில் நிா்வாகம் முடிவெடுத்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவா் கருவறை எதிரே யாக சாலை அமைக்கப்பட்டு, பரிகார பூஜை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

கோயில் செயல் அலுவலா் தே.திருநாவுக்கரசு, நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி, கோயில் திருப்பணி கமிட்டித் தலைவா் ஆா்.ஜி.எஸ்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT