திருப்பூர்

ரூ.61.33 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.61 லட்சத்து 33 ஆயிரத்து பருத்தி விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2, 531 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், ஆா்.சி.எச். பி.டி.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7,000 முதல் ரூ.8,311 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ.3,000 முதல் ரூ.5,500 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.61 லட்சத்து 33 ஆயிரம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT