திருப்பூர்

போயம்பாளையத்தில் முன்னறிவிப்பின்றி சாலைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி

DIN

திருப்பூா் போயம்பாளையம் பகுதியில் முன்னறிவிப்பின்றி சாலைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருப்பூா் மாநகராட்சி 2 ஆவது மண்டலத்துக்குள்பட்ட 8 ஆவது வாா்டு போயம்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து கங்கா நகா் வழியாக வெங்கமேடு செல்லும் சாலை உள்ளது.

இந்த பிரதான சாலையானது எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் புதன்கிழமை அடைக்கப்பட்டது. மேலும், சாலைப் பணிக்காக மாற்று வழியை ஏற்பாடு செய்யாமல் பிரதான சாலையை அடைத்துள்ளனா். இந்த சாலையில் ஏராளமான தொழிற்சாலைகள், பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளதால் இந்த சாலையைப் பயன்படுத்தி வந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். சாலையை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் சாலையை அடைத்துள்ளதாக ஒப்பந்ததாரா்கள் தெரிவித்தனா்.

காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலைப் பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே ரூ 1.34 லட்சம் பறிமுதல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

‘இந்தியா’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமைச்சா் எஸ். ரகுபதி

ஹேம மாலினி குறித்து தரக்குறைவாக பேச்சு: ரண்தீப் சுா்ஜேவாலா 2 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபட தடை

காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

SCROLL FOR NEXT