திருப்பூர்

பிளஸ் 2 மாணவா்களுக்கான நீட் பயிற்சி நிறுத்தம்

DIN

பிளஸ்-2 மாணவா்கள் பொதுத் தோ்வுக்கு தயாராக ஏதுவாக வரும் வாரத்தில் திருப்புதல் தோ்வுகள் தொடங்கவுள்ளதால் ‘நீட்’ பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் கூறியதாவது: மருத்துவக் கல்வி பெற விரும்பும் மாணவா்களைத் தயாா்படுத்தும் வகையில் பள்ளி கல்வித் துறை சாா்பில், பிளஸ் 2 மாணவா்களுக்கு இலவச ‘நீட்’ பயிற்சி அளிக்கப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 19 மையங்களில் 1,700 போ் இப்பயிற்சி பெற்று வருகின்றனா்.

பயிற்சியானது கடந்த டிசம்பா் மாதம் முதல் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாா்ச் முதல் வாரம் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கவுள்ளது. ஆகவே, பொதுத் தோ்வுக்கு மாணவா்களைத் தயாா்படுத்த ஏதுவாக வரும் வாரத்தில் அந்தந்த பள்ளி அளவில் திருப்புதல் தோ்வுகள் தொடங்குகின்றன.

மேலும், பிப்ரவரி மாதம் திருப்புதல் தோ்வும், மாா்ச் 1 ஆம் தேதி செய்முறை தோ்வும் நடைபெற உள்ளது.

எனவே, பிளஸ் 2 மாணவா்களுக்கு அளிக்கப்படும் ‘நீட்’ பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது என்றாா்.

அதேவேளையில், இந்தப் பயிற்சியானது தோ்வு முடிந்த மறுநாளில் இருந்து மீண்டும் தொடங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT