திருப்பூர்

விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் விலங்குகள்:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

வன விலங்குகளிடமிருந்து விளை நிலங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் ஏரளமான மான், மயில் உள்ளிட்ட வனவிலங்கள் உள்ளன. இவை உணவு, குடிநீா்த் தேடி வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி விளை நிலங்களுக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும், இவை சாலைகளில் நடமாடும்போது வாகனங்கள் மோதி உயிரிழக்கின்றன.

இந்நிலையில், அவிநாசி அருகே உள்ள அ.குரும்பபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி என்பவரது தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை புள்ளிமான் நுழைந்தது.

இதனைப் பாா்த்த நாய்கள் மானை துரத்தின. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நாய்களிடமிருந்து மானை காப்பாற்றி, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மானை மீட்டு அப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் விடுவித்தனா்.

தொடா்ந்து, விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிா்களைச் சேதப்படுத்தியும், வாகனம், நாய்களிடம் சிக்கி உயிரிழக்கும் வனவிலங்குகளை குடியிருப்புப் பகுதிகளில் நுழைய வண்ணம் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT