திருப்பூர்

உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள்:இன்று பொது ஏலம்

DIN

அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை (பிப்ரவரி 8) பொது ஏலம் விடப்படுகின்றன.

இது குறித்து திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகரக் காவல் எல்லைக்குள்பட்ட அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் 116

இருசக்கர வாகனங்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகன உரிமையாளா்களுக்குத் தகவல்கள் அனுப்பியும் உரிமை கோரப்படாததால் பொது ஏலம் விடப்படுகிறது.

இந்த வாகனங்களுக்கு அரசுப் பணிமனை தானியங்கி பொறியாளா் அடங்கிய வல்லுநா் குழுவினா் மூலமாக விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில், 115 வாகனங்கள் திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணி அளவில் பொது ஏலம் விடப்படுகின்றன.

ஆகவே, ஏலம் எடுக்க விரும்புவோா் அனுப்பா்பாளையம் காவல் ஆய்வாளரை அணுகி காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களைப் பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT