திருப்பூர்

ரூ.43.56 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 43.56 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு திருச்சி, மதுரை, வடமதுரை, பழனி, திருப்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 134 விவசாயிகள் தங்களுடைய 1, 119 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 59 டன்.

ஈரோடு, பெருந்துறை, சிவகிரி, காங்கயம், வெள்ளக்கோவில், நஞ்சை ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆா்.எஸ். பகுதிகளைச் சோ்ந்த 9 வணிகா்கள் கொப்பரையை வாங்க வந்திருந்தனா்.

இதில், கொப்பரை கிலோ ரூ.59.20 முதல் ரூ. 82.40 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 79.15.

ADVERTISEMENT

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.43.56 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT