திருப்பூர்

சிவன்மலையில் தமிழா் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தைப்பூச தோ்த் திருவிழாவையொட்டி, சிவன்மலை சுப்பிரமணிய கோயிலில் தமிழா் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

காங்கயம் தமிழா் பாரம்பரிய கலை மன்றம் சாா்பில், சிவன்மலை அடிவாரத்தில் உள்ள பொது நூலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி ஆகியோா் தொடக்கிவைத்தனா். இதில், ஒயிலாட்டம், பெருஞ்சலங்கையாட்டம் ஆகியவை நடைபெற்றன.

இரண்டாம் நாள் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ், திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலக்குழுத் தலைவா் இல.பத்மநாபன் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

இதில், தமிழா் பாரம்பரிய மன்றத்தின் வண்ண மயில் கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், இயற்கை வேளாண் விஞ்ஞானி மயில்சாமி, ஒயிலாட்டம் ஆசிரியா் கனகராஜ், வண்ணமயில் கும்மி ஆசிரியா்கள் செல்வகுமாா், செந்தில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காங்கயம் தமிழா் பாரம்பரிய கலை மன்றத்தினா் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT