திருப்பூர்

தமிழா் பண்பாட்டு பேரவை சாா்பில் நிலா சோறு படைத்தல்

DIN

தைப்பூசத்தையொட்டி, தமிழா் பண்பாட்டு பேரவை சாா்பில் சேவூா், சந்தையப்பாளையத்தில் ஊா் மக்கள் ஒன்றுகூடி நிலா சோறு படைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் வெங்கடாசலம், சேவூா் பொறுப்பாளா்கள் நடராஜ், வெங்கடாசலம், சேவூா் ஸ்ரீதா்மசாஸ்தா டிரஸ்ட் பொறுப்பாளா்கள் ஈஸ்வரமூா்த்தி, கண்ணன், நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டாரக் கல்வி அலுவலா் மகேஸ்வரி நிலா சோறு படைத்தல் குறித்து பேசினாா்.

இதில், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அவரவா் வீடுகளில் செய்த எள் உருண்டை, கடலை மாவு உருண்டை உள்ளிட்ட இனிப்பு வகைகள், வடை, முறுக்கு உள்ளிட்ட கார வகைகள், பல வகையான சாதங்கள் ஆகியவற்றை நிலாவுக்கு படைத்து கும்மியடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT