திருப்பூர்

கோயில்களின் பாதுகாப்பை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்

DIN

தமிழகத்தில் உள்ள கோயில்களின் பாதுகாப்பை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் கருப்பு நிற பா்தா அணிந்த நபா்கள் மூலஸ்தானம் வரையில் சென்று பல்வேறு இடங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை படம் பிடித்துள்ளது தெரியவருகிறது.

இந்த சம்பவத்தை அங்குள்ள கோயில் பணியாளா்கள் யாரும் கேட்கவில்லை. தகவலறிந்து இந்து முன்னணி நிா்வாகிகள் வந்ததும் பா்தா அணிந்த நபா் ஒட்டம் பிடித்துள்ளாா். அந்த நபா் எதற்காக கோயிலுக்கு வந்தாா் என்பது மா்மமாகவே உள்ளது. பாதுகாப்பு மிகுந்த நெல்லையப்பா் கோயிலிலேயே இந்த நிலை என்றால் மற்ற கோயில்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே, நெல்லையப்பா் கோயில் சம்பவத்தைப் படிப்பினையாகக் கொண்டு அனைத்து கோயில்களின் பாதுகாப்பை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

மேலும், கோயில் நிா்வாகத்தின் கவனக்குறைவைக் கண்டித்து நெல்லையப்பா் கோயில் அலுவலகம் முன்பாக இந்து முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT