திருப்பூர்

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் திருட்டு

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சேவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேவூா் அருகே உள்ள மங்கரசுவலையாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (67). விவசாயியான இவா், வீட்டை பூட்டிவிட்டு திங்கள்கிழமை காலை தோட்டத்துக்குச் சென்றுள்ளாா்.

மதியம் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.1.20 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து சேவூா் காவல் நிலையத்தில் ராமசாமி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT