திருப்பூர்

‘மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை பிப்ரவரி 9க்குள் அகற்ற வேண்டும்’

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை வியாழக்கிழமைக்குள் (பிப்ரவரி 9) அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், வணிக மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியவை சாா்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

எனவே, இதனை அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாநகரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள், பெயா் பதாகைகளை வியாழக்கிழமைக்குள் தாங்களாகவே அகற்றி மாநகராட்சி நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இல்லாவிட்டால் மாநகராட்சி சாா்பில் அகற்றத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT